விவரிக்க முடியாத அதிர்ச்சி,கொந்தளிப்பு. போராட்டங்கள் என ஆந்திரா அல்லோலகலப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறையான விசாகப்பட்டிணம் ஸ்டீல் உற்பத்தி ஆலையை – 36,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், 40,000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் வி.எஸ்.பியை பாதுகாத்தே தீருவது என்று ஆந்திரா போர்க்கோலம் பூண்டுள்ளது! வைசாக் ஸ்டீல் ஆலை 1970 ல் இந்திராகாந்தியால் திட்டமிடப்பட்டு நீண்ட நெடிய அடித்தள வேலைகள், தியாகங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்டதாகும். இதற்கு அன்றைய சோவியத் ரஷ்யா பேருதவி செய்தது! இது மட்டுமின்றி உள்ளூர் மக்கள் பலர் தங்கள் நிலத்தை தானமாக ...