கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திரகிரி மலைத்தொடர்களின் தெற்கு சரிவில் தோன்றுகிறது பறளியாறு. கோதையாறு போல பழமையான பாசன கட்டுமானங்களை கொண்டது பறளியாறு. அதன் தொன்மை பற்றி அறியும் முன் பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கும் காட்டாறுகளை குறித்து அறிந்துக் கொள்வோம். வல்வன்கல் மலை, பாலமோர், மாறாமலை, வில்லுசாரிமலை, ஆலம்பாறை, வலியமலை, புறாவிளை, சாம்பகுச்சி, முடுவன்பொற்றை, இஞ்சிக்கடவு, கொட்டப்பாறை, கூவைக்காடுமலை, வெள்ளாம்பி உள்ளிட்ட மலைகளில் தோன்றும் ஊற்றுக்கள், ஓடைகள், காட்டாறுகள் பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கிறது. பெருஞ்சாணி அணை என்கிற பெரும்பள்ளத்தில் தேக்கிவைத்திருக்கும் பறளியாற்றில் பல காட்டாறுகள் ...