என்னவென்று யூகிக்கமுடியாத காய் நகர்த்தல்கள் பீகார் அரசியலில் அரங்கேறிக் கொண்டுள்ளது! கூட இருந்தே முதுகில் குத்தியதோடு, தங்களுக்கு குழியும் பறிக்கிறது பாஜக என்பதை முன்னெப்போதையும் விட, தற்போது மிக ஆழமாக உணரத் தொடங்கியுள்ளது ஜனதாதளம்! அருணாச்சல பிரதேசத்திலும் பாஜக – ஜனதாதளம் கூட்டணி கண்டுள்ளன! அங்கு ஜனதாதளம் ஆதரவுடன் தான் பாஜக ஆட்சி செய்கிறது! அதில் அதிகாரத்தில் பங்கு கேட்ட ஜனதாதள எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி என ஆசை காட்டி கட்சி மாற வைத்துள்ளது பாஜக! இது தேசிய அளவில் ...

பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிக் கோட்டைத் தொட்டது எப்படி என்று பார்த்தால், பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன். தேர்தலுக்கு முந்திய கள ஆய்வில் எல்லோருக்கும் தெரிய வந்தது என்னவென்றால், ’மகாபந்தன்’ எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்பதே! லாலுவுவின் மகன் தேஜஸ்வி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.அவரும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மூன்றுமுறை ஆட்சி கட்டிலில் இருந்துவிட்ட நிதீஸ்குமார் ...