இதைவிட கேவலமாக சமகால வரலாறை படமாக்க முடியாது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டரில் மொத்தமே அதிகபட்சம் 35 பேர் மட்டுமே படம் பார்த்தனர். அதிமுகவினரே இந்த படத்தை ஏற்கமாட்டார்கள்! ஜெயலலிதாவை மிகைப்பட உயர்த்தி சொல்ல வேண்டும் என நினைப்பது தவறல்ல. ஆனால், அதற்காக அவரைத் தவிர அவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் – எம்.ஜி.ஆர் உட்பட – டம்மியாக்கி இருக்க வேண்டியதில்லை. ஒரு வரலாற்றை சற்று அலங்காரப்படுத்தி தோற்றம் தருவது என்பது வேறு! உள் நோக்கத்துடன் சிதைப்பது வேறு! எம்.ஜி.ஆருக்கு வணக்கம் போடுவது நாய்க்கு வணக்கம் ...