இந்தியாவில் சுமார் மூன்று கோடி நாய்கள் உள்ளன. இந்தியாவில் நாய்களால் கடிபட்டு ஆண்டு தோறும் இருபதாயிரம் நபர்கள் இறக்கிறார்கள். உலகில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் இறப்பவர்கள் 59,000. எனினும் கொரானா காலத்திலும் கூட தெரு நாய்களை தவறாமல் கவனித்த ஆயிரமாயிரம் எளிய மனிதர்களைக் கண்டு பெருவியப்பே எனக்கு ஏற்பட்டது…! நாய் கடித்தவர்கள் அனைவரும் இறப்பதில்லை. வெறி நாய் கடித்தவர்கள் மட்டுமே இறக்கிறார்கள்! வெறி நாய்க்கடிக்கு உடனே சிகிச்சை எடுத்தவர்கள் பிழைத்து விடுகிறார்கள். சிகிச்சை எடுக்க தாமதமானால் பிழைப்பது கடினம்! தெரு நாய்கள் ஆபத்தானவையா? அன்பானவையா? என்பது ...