மென்மையான மனிதர்,ஆனால் உறுதியான உள்ளம்! ஐஏஎஸ் என்ற பெரிய பதவியை வகித்தவர் என்ற பந்தா சிறிதுமில்லாத நட்பான அணுகுமுறை, ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதி, சமரசமற்ற நேர்மை…ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர் சசிகாந்த் செந்தில். தான் வகித்த ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடெங்கும் சுற்றி பாஜகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் தலையகமான சத்தியமூர்த்திபவனில், அறம் இணைய இதழுக்காக நமது நிருபர் செழியன்.ஜா.விற்கு அவர் தந்த நேர்காணல். ஐ.ஏ.எஸ் என்ற பெரிய பதவியில் மக்களுக்கு எவ்வளவோ ...