ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தும் எளிமை மாறாதவர்! எத்தனையோ நன்மைகளை கரிசல் மண்ணுக்கும், மக்களுக்கும் பெற்றுத் தந்தவர்! சோ.அழகர்சாமியின் வாழ்க்கையோடு, கோவில்பட்டியின் வரலாற்றையும் சொல்கிறார் காசி விஸ்வநாதன். கோவில்பட்டி என்றதும் நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும்  பாரதி விழாதான் . அங்கு பல ஆண்டுகளாக  பாரதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடித்தளமிட்டவர் சோ.அழகர்சாமி. ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ள இவர், எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கூட்டுறவு அமைப்புகளை செயலூக்கத்துடன் உருவாக்கியவர். விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.  சோ.அழகர்சாமியைப் பற்றிய ...