‘ஏழரைப் பங்காளி வகையறா’ மதுரை இஸ்மாயில்புரத்தை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை நேர்கோட்டில் சொல்லும் யதார்த்தமான நாவல் இது. எஸ். அர்ஷியா எழுதிய இந்த நாவல் எளிய மனிதர்களின் உண்மைக் கதையாகும் .வாழத் தெரியாதவன் குடும்பம் படும் பாட்டை பேசுகிறது! ‘ஒரு சமூகத்தின் வாழ்வியலை, மூன்று தலைமுறை ஊடாக, பேசுகிறது. இது வளமான இலக்கிய நாவல்’ என்று கூறுகிறார் பேரா.எஸ்.தோதாத்ரி். தன் முன்னோர்களின் வாழ்வியலை இழையாகக் கொண்டு ஏழரைப் பங்காளி என்ற வம்சத்தின் பெயரையே நாவலாக்கி உள்ளார், அர்ஷியா. 15 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயில் ...