2015 தின் சோக காட்சிகள் இந்த ஆண்டும் அரங்கேறுவதற்கான சாத்தியகூறுகள் இருந்த போதிலும், ஆட்சி மாற்றத்தினால் கொஞ்சம் தப்பித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்! பல ஆயிரம் கோடிகள் மழை நீர் வடிகால் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டுள்ளன. அவை போதுமான பலன்களை தராமல் வீடுகளுக்குள் வெள்ளம் போனதன் காரணம் என்ன..? இன்றைய ஆட்சியாளர்கள் பேரழிவுகளை தவிர்க்க ஆனமட்டும் முயற்சிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. முதல்வரும், அதிகாரிகளும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இப்போதே நிலைமை இப்படி உள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் ...

அதிமுக அமைச்சரவையில் ஒருவருக்கொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை தான்! என்றாலும் அதில் வேலுமணிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு! அதிகாரம் என்பதை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அடக்குமுறையாகவும் கையாளத் தெரிந்த ஒரு அராஜவாதி வேலுமணி. பணம்,அதிகாரம்,அடக்குமுறை ஆகிய முப்பெரும் ஆயுதங்களுடன் தன்னை எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று தாக்கக் கூடியவர். இதற்கு பத்திரிகை துறையிலேயே பல உதாரணங்கள் உள்ளன. கமலஹாசனைக் கூட கப்சிப் ஆக்கிய அனுபவமும் அவருக்குண்டு…! தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு வேலுமணி ...