நீதிபதிக்கு தானும் ஒரு ஹீரோவாக திடீர் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும்! நடிகர் விஜய்க்கு வரி விலக்கு தர மறுத்திருந்தால் அதை யாரும் விவாதிக்க இடமில்லை. ”வரி கட்டத் தகுதியானவர் தான், சட்டப்படி அவர் வரி தந்துவிட்டு போகட்டுமே’’ என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், வரி விலக்கு கேட்டதைக் கொண்டே, அவர் வரி ஏய்ப்பு செய்வதாகக் கூறி நீதிபதி அவர்கள் மிக காட்டமாக பேசியுள்ளார். இது ஏதோ தனி நபர் தாக்குதல் போன்ற தோற்றத்தை தருகிறது. ”லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள் திரையில் ...