தமிழகத்தின் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நேரடியாக நியமிக்காமல் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நியமிக்கிறார்கள். இதன் மூலம் அடித்தட்டில் உள்ள தினக் கூலி தொழிலாளர்களை அத்துக் கூலியாக, அடிமாட்டு சம்பளத்திற்கு பிழிந்து எடுப்பதோடு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஒப்பந்தரார்களும் சேர்ந்து கொண்டு முக்கூட்டு கொள்ளையடிக்கிறார்கள்…! இதை அந்த தொழிலாளர்களின் ஒப்பந்த வாக்குமூலமாகவே அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத   விக்கிரமாதித்தன்   முருங்கை மரத்தின் மீது ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டான். “உள்ளாட்சிகளில் பணிபுரியும் துப்புரவு  தொழிலாளர்களுக்கு ...