சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4 தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது. உலகம் முழுவதுமே பெண்களுக்கான  பாலியல் சீண்டல்  பிரச்சனைகள்  இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும்  பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும்  சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது! தனியார் ...

இப்படி எல்லாம் கூட நடக்குமா..? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாவின் மாபெரும் நிறுவனமான ஏர் இந்தியா விற்பனை நடந்துள்ளது. நஷ்டத்திற்கே வழியில்லாத லாபகரமான விமான சேவைத் தொழிலை அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக கூட்டுச் சேர்ந்து சீரழித்தது போதாது என்று இன்று கிட்டத்தட்ட அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு தந்துவிட்டனர்! கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இந்த விற்பனை குறித்து கொந்தளித்துள்ளார் “நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் சூறையாடி வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி ...

அரசாங்க சொத்துக்களையெல்லாம் தங்கள் ஆத்மார்த்த நண்பர்களுக்கு அள்ளி எடுத்து தந்து கொண்டுள்ளது பாஜக அரசு. தேசீய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் -பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு கொடுப்பதன் மூலம்-திரட்டப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கு எதிராக இன்று தமிழக சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசின் சமூக விரோத செயல்பாடுகளை யார் தடுப்பது,எப்படி எதிர்ப்பது என இந்தியாவே திகைத்து நிற்கையில். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ...

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் அரசின் வசமுள்ள சொத்துகள், மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு  குத்தகைக்கு தரப் போகிறார்களாம்! இந்தியாவின் சமானிய குடிமக்களுக்கு உயர்தரத்தில் அணுகக்கூடிய வகையில் உள் கட்டமைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், ,சுரங்கம், எரிவாயுக் குழாய் உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு ...

தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் நல்ல முயற்சியாக தெரிந்தாலும், நடைமுறையில் படு சிக்கலான சட்டமே இது! ஹால்மார்க் முத்திரை இருப்பதாலேயே தரம் உறுதியாகிவிடாது! இதன் நடைமுறைபடுத்தும் வழிமுறைகளைப் பார்க்கும் போது சிறிய நகை வியாபாரிகளை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியா..? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்யலாம் அரசு? உலகத்திலேயே அதிகமாக தங்க நகைகளை பயன்படுத்தும் நாடு இந்தியா! அதிலும் தமிழகம் முதலிடம்! நகை தயாரிப்பாளர்களில் நேர்மையானவர்கள் மிகக் குறைவு! எத்தனை கேரட் தங்கம் என்பதில் தான் அதன் தரம் இருக்கிறது! ...

இன்றைய தினத்தந்தி , தினகரன் நாளிதழ்களில் முதல் பக்கம் அதிலும் முழு பக்கத்திற்கு கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம்! வருடந்தோறும் முட்டை விலை ரூ 2.24 பைசா மட்டுமே! ரூ 700 கட்டினால் வாரம் தோறும் 6 முட்டைகள் வீட்டிற்கு நேரடியாக வந்து டெலிவரி செய்யப்படும்! ரூ1,400 கட்டினால், 12 முட்டைகள் டெலிவரி செய்யப்படும். ரூ 2,800 கட்டினால், வாரம்தோறும் 24 முட்டைகள் தரப்படும். பணம் கட்டி 15 வேலை நாட்கள் (அதாவது தோராயமாக 20 நாட்கள்) காத்திருக்க வேண்டும். பணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட ...

அத்தியாவசிய உணவுப் பொருள் பால்! ஆவின் பாலுக்கு தமிழ் நாட்டில் நல்ல மவுசு உள்ளது! ஆனால், அதில் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அரசியல் தலையீடுகளும், அபார கொள்ளைகளும் நடக்கின்றன! மாடு வளர்த்து பால் தருபவனும் பலன் பெறுவதில்லை! விநியோகிப்பவனும் பலடைவதில்லை! இடைத்தரகர்கள், காண்டிராக்டர்கள் காட்டில் தான் மழை! எப்படி நடக்கின்றன..இந்த முறைகேடுகள்..! புரதச்சத்து அதிகம் கிடைக்கும் உணவுப்பொருள் பால்.பால் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதன் செயல்பாடு குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடையே பேசுகிறார். உலகப் ...