உலகத்தில் எத்தனையோ நதி நீர் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன! ஏன் வட இந்தியாவிலேயே கூட பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆற்று நீர் பகிர்வு சுமூகமாக முடிவடைந்துள்ளது. பக்ரா நங்கல் பயஸ் மேலாண்மை வாரியம் இதற்கு ஒரு உதாரணம்! ஆனால், காவிரி நீர் பங்கீட்டை மட்டும் ஏன் சுமூகமாக தீர்க்க முடியவில்லை…? இத்தனைக்கும் கடந்த 50 ஆண்டுகளில் காவிரியில் நாம் பெற்று வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களால் தமிழகம் காலம்காலமாக பெற்று வந்த காவிரி தண்ணீரை காப்பாற்றிக் ...