நாளும்,பொழுதும் பாலியல் புகார்கள் இல்லாமல் வாழ்க்கையை கடக்க முடிவதில்லை! எல்லா பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியவர்கள் ஒதுங்கி செல்வதும், குற்றமிழைப்பவர் தடையின்றி தொடர்ந்து முன்னேறுவதும், பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களுக்குள் புழுங்கி நொந்து பலியாவதும் எழுதப்படாத பொது விதியாக இருப்பதை காண முடிகிறது! குழந்தைகள் மலரைப் போன்றவர்கள், அவர்களுக்கு ஒரு பாதிப்பு எனில், அதற்கு உடனே முக்கியத்துவம் கொடுத்து, அந்த அநீதியை தடுக்க கூடிய மனமில்லை எனில், அல்லது துணிவில்லை எனில் இந்த உலகம் உயிரோடு இருப்பதைவிடவும் மண்ணுக்குள் புதைந்து அழிந்துவிடுவது எவ்வளவோ மேலானதாகும். நம் ...