தமிழகத்தின் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நேரடியாக நியமிக்காமல் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நியமிக்கிறார்கள். இதன் மூலம் அடித்தட்டில் உள்ள தினக் கூலி தொழிலாளர்களை அத்துக் கூலியாக, அடிமாட்டு சம்பளத்திற்கு பிழிந்து எடுப்பதோடு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஒப்பந்தரார்களும் சேர்ந்து கொண்டு முக்கூட்டு கொள்ளையடிக்கிறார்கள்…! இதை அந்த தொழிலாளர்களின் ஒப்பந்த வாக்குமூலமாகவே அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத   விக்கிரமாதித்தன்   முருங்கை மரத்தின் மீது ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டான். “உள்ளாட்சிகளில் பணிபுரியும் துப்புரவு  தொழிலாளர்களுக்கு ...

துப்புறவுப் பணியாளர்களை கண்ணியத்திற்குரியவர்களாக நடத்த வேண்டும் என களத்தில் இறங்கிப் பணியாற்றியவர் மகாத்மா காந்தி!  ’’மீண்டும் ஒரு பிறவி எனக்கிருந்தால் துப்புறவாளனாக பிறக்க விரும்புகிறேன்’’ என்று கூறிய காந்தியின் நினைவு நாளில் இன்னும் இந்தியாவில் துப்புறவு பணியை நவீனப்படுத்தாமல் இருப்பது மட்டுமல்ல, இந்தியாவில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்களும், அழுத்தப்படுபவர்களுமாக துப்புரவு தொழிலாளர்களே உள்ளனர் என்ற வகையில், அவர்கள் குறித்த உண்மை நிலவரத்தை விளக்கும் அ. சகாய பிலோமின்ராஜின் நேர்காணலே இது! ”துப்புரவு பணியை கண்ணியமான தொழிலாக மாற்ற வேண்டும்’’ என்பதற்காக எழுதியும்,பேசியும் சமூகப் பணியாற்றும் ...