தேசபக்தி என்பதை வியாபாரமாக, அரசியல் அதிகாரமாக, ஏன் போதையாகவும் கூட பலர் பயன்படுத்துகின்றனர்! இதையெல்லாம் பார்த்து அலுத்த சூழலில் அதை இயல்பான கண்ணோட்டத்துடன், நம்பகமான தன்மையில் சித்தரித்துள்ள வகையில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது சர்தார் உதம்.பொய்யான, பகட்டுத்தனமான தேசபக்தியாளர்களையும், அப்படியான கமர்ஷியல் படங்களையும் கண்டு சலிப்படைந்துள்ள நமக்கு இந்தப் படம் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இன்று நினைத்தாலும் மனதை உலுக்கிப் போடக்கூடிய ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றுவிட சபதம் ஏற்று அதை பல வருட முயற்சிக்கு ...