சிறப்பான திரை மொழி, உயிர்துடிப்புள்ள கதாபாத்திரங்கள், சாதியையும், அரசியலையும் வெற்றிக்கான கச்சா பொருள்காளக்கி கொள்ளும் கலைநுட்பம் யாவும் கைவரப் பெற்றுள்ளார் பா.ரஞ்சித். ஆனால், அவருக்கு வரலாற்றையும் நேர்மையாக சொல்ல விருப்பமில்லை! அரசியலையும் நேர்மையாக அணுகத் துணிவில்லை என்பதைத் தான் சார்பட்டா பரம்பரை சொல்கிறது. தலித் மக்கள் ஒடுக்கப்பட்டதை, அடக்குமுறைக்கு ஆளானதை, அவர்களின் தாங்கொணாத வலியை பேசுவதற்கு இன்னும் ஒரு நேர்மையான படைப்பாளி தமிழ் சினிமாவிற்கு வரவில்லை…என்றே தோன்றுகிறது! திரையின் காட்சிப் படிமங்களில் துல்லியமாக சொல்ல வேண்டிய உணர்ச்சிகளை கடத்த தெரிந்தவர் ரஞ்சித் . அதிலும், ...