சசிகலா விலகல் – தினகரனுக்கான எச்சரிக்கையே! ஊடக அறிவு ஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மாற்று கட்சி அரசியல்வாதிகள், சீமான்,பாரதிராஜா, அமீர், சரத்குமார் உள்ளிட்ட அரசியல், சினிமா பிரபலங்கள்..ஆகியோருக்கெல்லாம் மிக முக்கியத்துவமானவராக தெரிந்த சசிகலா தினகரனுக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ளவராகத் தெரியவில்லை. எப்படி ஜெயலலிதா சசிகலாவை தனக்கு பணி செய்வதற்கென்றே வைத்திருந்தாரோ..அவ்வாறே தனக்கு கட்டுப்பட்டவராக சசிகலா இருக்க வேண்டும் என்ற தினகரனின் அணுகுமுறைகளை பட்டவர்த்தனமாக உணர்ந்த பிறகு தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வருகிறது. சசிகலாவின் செல்வாக்கு தனக்கு பயன்பட வேண்டும். ...