இன்னும் என்னென்ன மலிவான கேலிக்கூத்துகளை அரங்கேற்றப் போகிறீர்களோ…! கடவுள், பக்தி, ஆன்மீகம்…ஆகியவை குறித்து பாஜகவினருக்கு எந்த அடிப்படை புரிதலுமே இல்லை என்பது அவ்வப்போது தெளிவாக நிரூபணமாகிக் கொண்டுள்ளது!மத நோக்கத்திற்கு அப்பால் மக்கள் நலன் என்பதே பாஜகவினர் சிந்தனையில் வராதா? வெற்றிவேல் யாத்திரையாம்! நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் ஆறு வரை முருகனின் அறுபடைவீடுகளையும் நோக்கிப் போகிறார்களாம்..? எதற்காக? முருகன் மீதான பக்தியா? ’’இல்லை’’ என்பதை அவர்களே, ’’தமிழகத்தில் தாமரை மலர்ந்திட வெற்றிவேல் யாத்திரை என்று சொல்லிவிட்டார்கள்! ஆக, அரசியல் வெற்றிக்கு பக்தியையும்,மதத்தையும் கையில் எடுக்கிறார்கள்! முருக பக்தர்கள் ...