மழைக் காலம் வந்தால் புயல் வருமா?, வெள்ளம் வந்து வீட்டில் மழைநீர் புகுந்துவிடுமா?, மரம் சாய்ந்துள்ளது, சுரங்கப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது அதனால் இங்கிங்கே செல்ல வேண்டாம் என்று தொலைக்காட்சியில் பிரேக்கிங் செய்தி ஓடிக்கொண்டிருக்கும். விளிம்புநிலை மக்களுக்கு அரசு, தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே உணவு வழங்குகிறார்கள். மழைக் காலம், கோடைக் காலம், குளிர் காலம் இப்படி எந்த காலம் வந்தாலும் பேச்சு மனிதர்களைச் சுற்றியே இருக்கின்றது. ஆனால், இந்த உலகில் மனிதர்கள் கூடவே கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன!. நம் ...

மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? பதற வேண்டாம், பணம் வேண்டாம்! யார் தயவும் தேவையில்லை! வரமாக வந்த மழையை வறண்டு கிடக்கும் நிலத்தடிக்குள் இதோ இந்த எளிய முறையை பின்பற்றி , அனுப்புங்கள்! வெள்ளத்தில் இருந்து உடனே விடுதலை! தொடர் மழை தமிழகம் முழுக்க சக்கை போடுபோட்டவண்ணம் உள்ளது! மழைவெள்ளத்தால் தண்ணீர் தேங்கி உள்ளதால் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், உற்பத்திக் கூடங்களும் தண்ணீரை வெளியேற்ற பகீரதப் பிரயத்தனம் செய்த வண்ணம் உள்ளனர்.முடிந்த வரை அரசு துரிதகதியில் இறங்கி நீரை வெளியேற்றினாலும் பல இடங்களில் அரசு உதவியை எதிர்பார்த்து ...

இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ  அழித்து கொண்டே  இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..?  புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..? இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள்  சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான்  ஜூன் 5.  உலக சுற்றுச்சூழல் தினம்! நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க ...

அமைதி தவழ்ந்த லட்சத் தீவின் மக்களை தற்போது நிம்மதி இழந்து, கொந்தளிக்க வைத்துள்ளது பாஜக! இஸ்லாமியர்களை பெருமளவு கொண்ட இந்த தீவில் அவர்களை இல்லாதொழிக்கவே இப்படி ஒரு சதிதிட்டத்தில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது..!இதன் மூலம் பூர்வகுடிகளை பூண்டோடு அழிக்கத் துடிக்கிறது பாஜக! இந்திய யூனியன் பிரதேசங்களின் ஒன்றான இலட்சத்தீவுகள் அரபிக்கடல் கேரள கரைக்கு அப்பால் 200 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. இது வரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்ட இந்த தீவு,  பா.ஜ. கவின் முக்கியஸ்தரான குஜராத்தின் அடாவடி அரசியல்வாதியுமான பிரபுல் ...

பொதுத்துறை நிறுவனங்களை பொலிகடாவாக்கி வரும் மத்திய பாஜக அரசு, அவற்றுக்கு இறுதி கட்ட மரண அடி கொடுக்க, மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவன வாரியத் தலைவராக நியமித்துள்ளது! டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தின் மல்லிகா, இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் (TAFE) தலைவராக உள்ளார். மல்லிகாவை பொதுத் துறை வாரியங்களின் தலைவராக நியமித்ததன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள், 12.34 லட்சம் தொழிலாளர்கள் உள்ள கொண்ட – சேவையை லட்சியமாக – இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது ...