(பகுதி-4) வீரப்பனுக்கே தெரியாத நல்ல விஷயங்கள் வீரப்பன் நடமாட்டத்தால் காட்டில் நடந்தன. காட்டில் நிறையக் கல்குவாரிகள் உண்டு. வெடிவைத்து பாறைகளைப் பிளக்கும்பொழுது ஏற்படும் சத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கேட்கும். பொதுவாக விலங்குகள், பறவைகள், சிறு உயிரிகள் சிறு சத்தத்தைக் கேட்டாலும் ஓடி ஒளிந்து கொள்ளும். காடு நூலகம் போல் மிக அமைதியான இடம். அங்கு வெடிச் சத்தம் கேட்டால் அங்கு வாழும் காட்டுயிர்களின் நிலைமை என்னாகும் மற்றும் வெடி வெடிக்கும் பாறைகளுக்கு அருகில் இருக்கும் உயிரினங்கள் நிறைய இறந்துவிடும். இது மட்டுமில்லாமல் இயற்கை ...