ஒரு பக்கம் பசித்த வயிறுகள்! மற்றொரு பக்கம் பாழாகும் நெல்மூட்டைகள்….! இது தான் தமிழக விவசாயிகள் வருடாவருடம் சந்திக்கும் அவலங்களாகும்! கொரோனா காலக் கொடுமையில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன! வியாபார நிறுவனங்கள் விரக்தியில் உழல்கின்றன! ஆயினும், இந்த நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் செய்தியாக விவசாய விளைச்சல் மட்டும் வீழ்ந்திடாமல் தாக்குபிடித்துவிட்டது. இயற்கையின் துணையை நம்பி விவசாயிகள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை! ஆனால், தயாரான நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததாலும், தகுந்த முறையில் பாதுகாக்காததாலும், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், பல நூறு ...