ஜனவரி 3 ஆம் தேதி முதல் அதிரடியாக பள்ளிக் குழந்தைகளுக்கு (15 -18) தடுப்பூசி படுவேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஐந்து பள்ளிக் குழந்தைகள் இறந்ததாக அவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளனர். குழந்தைகளை கொரோனா மிகக் குறைவாகவே தொற்றுகிறது. அப்படியே தொற்றினாலும் மரண பாதிப்பு இல்லை. ஆகவே தேவையில்லை என உலக மருத்துவ நிபுணர்கள் பலர் சொல்லியும் கேளாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி பள்ளிகளில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி போடப்படுகிறது! இது குறித்து மூன்று நாட்கள் முன்பு ...

நீண்ட கால ஆசிரியர்களின் பணியிட மாற்றக் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்து இத்தனை நாள் ஆறப் போட்டுவிட்டு தற்போது அவசரம் காட்டினால் ஏற்படப் போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பேற்பது..? விருப்பப்பட்ட இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு ஏதுவாக வெளிப்படையான கலந்தாய்வு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முன்னெடுப்பால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. கணவன் ஓரிடத்தில், மனைவி ஓரிடத்தில் என குடும்பங்களை பிரிந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் கேட்பதும், அந்தச் சூழ்லைப் பயன்படுத்தி கையூட்டு ஆதாயம் அடையும் அற்பர்களும் கல்வித் துறையில் ...

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள்; 7 ‘பள்ளிக் கூடம் சென்றோமா? மாணவர்களுக்கு பாடம் நடத்தினோமா?’ என்ற அளவோடு நிற்பதில்லை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை! சதாசர்வ காலமும் கற்பித்தல் அல்லாத பணிகள் ஏராளமாக தரப்படுகின்றன. இதில் EMIS பதிவேற்றம் என்ற டேட்டா என்ட்ரீஸ், கடும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகிறது, ஆசிரியர்களை! EMIS( Educational Management Information System)  கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் .  தலைப்பே சொல்கிறது , இது கற்பித்தல் பணி அல்ல , மேலாண்மைப் பணி என்பதை! பள்ளிகளில் ஒரு மாணவர் சேரும் பொழுதே அவருக்கு ...

பாடப் புத்தகங்களில் உள்ள மிக முக்கிய தலைவர்கள், தமிழின் ஆளுமைகளை சாதி பின்னொட்டுடன் குறிப்பிட்ட வழக்கம் பல காலமாகவே தொடர்ந்துள்ளது. பெயருக்கு பின்னால் உள்ள சாதி பின்னொட்டை தூக்கி எறியும் செயலை சுதந்திர போராட்ட காலத்திலேயே பெரியார் செய்துவிட்டார். அவரைப் போலவே பல்வேறு தலைவர்களும் செய்தனர். சுதந்திர போராட்ட காலத்திலும், திராவிட மறுமலர்ச்சி தோன்றி பெருவெள்ளமென பாய்ந்த காலகட்டத்திலும் சாதி அடையாளத் துறப்பு இயல்பாகவே நடந்தேறியது. பொதுவுடமை சித்தாந்த இயக்கங்களிலும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சாதி அடையாளத் துறப்பு மிக இயல்பாக இருந்ததை கண் ...

யாருமே யோசிக்காத வகையில், கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக் கூடம் இல்லாததால் சிறுவர் சிறுமியர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்! சத்துணவு சாப்பிட வழியற்ற நிலை, ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன் இல்லாமை, படிப்பிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் மனநிலை, வேலை இழந்த பெற்றோர்களால் குழந்தை தொழிலார்களானவர்களின் நிலை..என பலவாறாக கள ஆய்வுகள் செய்து அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்! அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது? சத்துணவை மட்டுமே உண்டு வந்த பல பிள்ளைகளின் நிலை ...