சமீபத்தில் ரயிலில் மதுரையில் இருந்து சென்னை வந்தேன்! பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஏசி கோச் முழுக்க இடைவெளியின்றி மக்கள் உட்கார வைக்கப்படுமளவுக்கு நிரம்பியிருந்தது! வெண்டிலேசன் இல்லாத முழு இருக்கைகளும் நிரப்பட்ட ஏசிகோச்சில் தான் இரவு முழுவதும் பயணப்பட நேரிட்டது! மிக இயல்பாக மக்கள் பேசிப் பழகி, சாப்பிட்டு,உறங்கி வெளியேறினர்! நானும் அவ்வாறே பயணப்பட்டேன்! இதே போல ஏர்போர்டிலும் கூட்டம் நிறைந்து இருந்ததைக் கண்டேன். விமான இருக்கைகளும் இடைவெளியின்றி நிரப்பட்டு மக்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்! நானும் அவ்வாறே பயணப்பட்டேன்! காய்கறி சந்தையில் மக்கள் மிக இயல்பாக நெரிசல்களுடன் ...