தரமற்ற கட்டிடங்கள், தகுதியற்ற நிர்வாகம், பகல் கொள்ளையடிக்கும் தாளாளர்கள், பரிதாபத்திற்குரிய ஆசிரியர்கள், பரிதவிக்கும் மாணவர்கள்..! இது போன்ற நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டால் என்ன..? திருநெல்வேலி டவுன் செல்லும் சாலையில்  பாளையங்கோட்டையில் ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளியில் டிசம்பர் 17 காலை பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ...

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 6 தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் பற்றாகுறை நிலவுகிறது. இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளா..? ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆர்வமில்லையா? இது காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் சூழ்ச்சியா..? அரசு ஆரம்ப பள்ளிகளில் 1997 ஆம் ஆண்டு வரை இருபது மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், 1997 முதல்  1 : 40 என்று மாறியது.  மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. கல்வி உரிமைச் சட்டம் ...

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4 தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது. உலகம் முழுவதுமே பெண்களுக்கான  பாலியல் சீண்டல்  பிரச்சனைகள்  இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும்  பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும்  சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது! தனியார் ...

பள்ளிகள் திறக்கப்பட்டு 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் வருகின்றனர். நமது தமிழக முதல்வர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளை வரவேற்று மிகவும் கனிவுடன் அறிவிப்பு தந்துள்ளார். பள்ளிகள் திறப்பையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே அதற்கான ஆயுத்தப் பணிகள் நடந்தன! தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மிகவும் கவனமாக திட்டமிடல் செய்தனர்!  ஆயினும் அடிப்படை வசதிகற்ற நிலையிலும், ஆசிரியர் பற்றாக்குறைகளிலும், விதவிதமான சவால்களை சந்திக்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறெல்லாம் திட்டமிட்டனர், கள எதார்த்தம்,அவர்கள் சந்திக்கும் சவால்கள் ...

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 1 அரசுப் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன! இந்தச் சூழலில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டமாம்! அதற்கு 200 கோடி செலவாம்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே இத்திட்டம்! காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துகள் இதில் புதைந்துள்ளன..! நவம்பர் 1 ஆம் தேதி, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை கல்வி பயிலும்  குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு! ஏறக்குறைய  19 மாதங்களாக பள்ளிக்கு ...