உலக உருண்டையில் நான்கில் மூன்று பங்கு (72 %) நீரால் ஆனது. அதில் பெரும்பகுதி கடலாக உள்ளது. இது இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்று. கடல் பூமியின் பருவ நிலையைச் சீராக வைப்பதோடு மட்டுமல்லாமல் காற்றைச் சுத்தப்படுத்தவும், உணவு வழங்கவும் உதவி செய்து கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுமிடமாகவும் இருக்கிறது. நுண்ணுயிரி முதல் உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் வரை கடலில்தான் வாழ்கின்றன. இந்த பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ சம உரிமை உள்ளபோதும் உயிரினங்களின் இறுதித் தோற்றமாகிய மனிதனின் அளவு மீறிய நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக ...