கட்டுக்கட்டாக கரன்சிகளையும்,கண்ணைப் பறிக்கும் தங்க கட்டிகளையும் வீடெங்கும் நிறைத்து வைத்திருந்த சேகர்ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார்  குற்றமற்றவராக! ”குற்றமற்றவரை குற்றவாளியாக்கிவிட்டோமே” என தன் தவறுகளுக்காக பாஜக நாணிச் சிவந்து, இல்லையில்லை, கூனிக்குறுகி வெட்கப்படுகிற அழகைப் பாருங்களேன்…! சி.பி.ஐ சிறுமைப்பட்டு நிற்கிறது. ரிசர்வ் வங்கி அசமந்தமாய் முழிக்கிறது.காவல்துறை கைகட்டிப் பார்க்கிறது! ஆகா…,என்ன நடந்தது? இந்தக் கதையை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா? 2016 ல் ஜெயலலிதா மறைவையடுத்து டிசம்பர் 8 ஆம் தேதியே சேகர் ரெட்டி வீட்டிலும்,அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு,கண்டெடுத்தவையாக அறிவிக்கப்பட்டவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! தங்கம் ...