கடந்த சில நாட்களாக அதிமுக அரசின் சாதனைகள் விளம்பரங்கள் தொடர்ச்சியாக சன் தொலைகாட்சியில் வந்து கொண்டிருக்கின்றது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையுமேற்படுத்தியுள்ளது! சன் தொலைகாட்சி தான் தமிழக மக்கள் அதிகமாக பார்க்கும் தொலைகாட்சி! பூமாலை என்ற வீடியோ மேகசீனை நடத்தி மிகுந்த நட்டப்பட்டிருந்த தன் பிள்ளைகளை கரைசேர்க்க முரசொலிமாறன் தவித்தார்.அப்போது, மேக்னம் டாட்டியா என்ற இந்திய தொழில் அதிபரிடம் ரஷ்ய சேட்டிலைட் ஒன்றின் காரிஜாண்டர் டிரான்ஸ்பார்மர் இருந்தது! அதை திமுகவின் எம்.பி என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி வாங்கித் தந்தார் முரசொலிமாறன். சேனல் ஆரம்பிக்க கருணாநிதியிடம் ...