கதையே இல்லாமல் ரத்தம் தெறிக்கும் வன்முறைகளோடு களம் கண்டு வருகிற தமிழ் சினிமாக்களுக்கு இடையே அழுத்தமான கதை, அச்சு அசலான வாழ்க்கையைச் சொல்லும் கதாபாத்திரங்கள், எளிமையான கிராமத்துப் பின்புலம் ஆகியவற்றுடன் மானுடத்தின் உன்னதப் பக்கங்களை காட்டுகிறது இந்தப்படம்; விசாரணையே இல்லாமல் சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கும் கணவனிடம் வாழ முடியாமல் ஓடி வாழ்க்கையை தொலைத்த பெண், கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை போராட்டங்கள், அண்ணன் – தங்கை பாசம், ஒரு தலைக் காதல், மன்னிக்கும் குணம்..இப்படியாக பின்னப்பட்டுள்ளது திரைக்கதை. மிலிட்டிரியில் வேலை பார்க்கும் அண்ணனின் மனைவியை தவறாகச் ...