இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை  உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசின் கடமையாக்கவுமான சட்டத்தின் தேவையை பேசுகிறது இக்கட்டுரை! அறப்போர் இயக்கம்,  பொதுமக்கள் 2000 பேரிடம் ஒரு இணையவழி ஆய்வு நடத்தியது. அரசுத் துறைகளின் சேவையைப் பெறும் பொழுது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று 93% பேரும், கசந்த அனுபவங்களைப் பெற்றதாக 82% பேரும், குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழலில்தான் சேவை பெறும் ...

Gpay, Paytm, Phonepe, Amazon Pay போன்ற பணப் பரிவர்த்தனை ஆப்கள்  போட்டி போட்டுக்கொண்டு இலவசமாக நமக்குச் சேவையைத் தருகின்றன! நாம் என்ன தொகையை அனுப்புகிறோமோ, அதே தொகை அனுப்பியவர்களுக்கு அப்படியே தந்துவிடுகின்றன! அதற்கு நம்மிடம்  இருந்து எந்தவித கட்டணமும்  வாங்குவதில்லை. இலவச சேவையை எப்படி வழங்குகின்றன, இந்த நிறுவனங்கள்? இதனால் இந்த  நிறுவனங்களுக்கு என்ன லாபம்? முற்றிலும் இலவசம் என்றால், நஷ்டம் வரவே அதிக வாய்ப்பு உண்டு. இந்த ஆப்களை பயன்படுத்தும் நமக்கு இப்படிப் பல கேள்விகள் தோன்றலாம். உண்மையில் இவை நமக்கு ...

கொரோனா இரண்டாம் கட்டம் மிக வீரியமாக மக்களை தாக்கி வருகிறது. இந்த நேரத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் குறிக்கோளாக இருக்கணும். இந்த சூழலில் எல்லா நல் வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய முறைகளில் உள்ள எந்தெந்த நல்ல மருந்துகள் கொரானாவை குணப்படுத்த உதவுகிறதோ…, அவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதில் ஏன் இத்தனை தயக்கங்கள், எதிர்ப்புகள்..? முதல் கொரானா தொற்று ஏற்பட்ட போது, நீண்ட தயக்கத்திற்குப் பிறகு தான் சித்த மருத்துவம், ஆயூர்வேதம், ஹோமியோபதி..ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளையும் அனுமதித்தார்கள்! ஆனால், ...