‘ஒரு பெண் தன்னார்வத்துடன் கொள்ளும் பாலியல் உறவு குற்றமாகாது, சட்டத்திற்கு புறம்பாகாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்ணியக் குறைவாக யாரும் நடத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! மிக நுட்பமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இந்த தீர்ப்பு குறித்து சில பெண் ஆளுமைகளின் கருத்து! ”என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தான் ஐயா பொன்னகரம்” என்று ஒரு புகழ்பெற்ற கதை முத்தாய்ப்பாக முடியும். அடிபட்டு கிடக்கும் தன் கணவனுக்கு பால், கஞ்சி வாங்குவதற்காக, அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ...

சென்னை ஐஐடி, ஒரு உயர் கல்விக்கான நிறுவனம்! ஆனால், அதில் துயர் மரணங்களும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், சாதியப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் போன்றவையும் தொடந்து நடந்த வண்ணம் உள்ளன! ஆனால், அவற்றில் சட்டப்படியான நடவடிக்கைகள் என்பது சாத்தியமில்லாமலே போய்க் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? 2018 தொடங்கி தற்போது வரையில் சென்னை ஐஐடியில் ஆறேழு மாணவ,மாணவிகள் மரணித்துள்ளனர். கொலையா அல்லது தற்கொலையா என வகைப்படுத்த முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இந்த மாணவர்கள் இறப்பதும், அவை தொடர்பான பல உண்மைகள் வெளி வந்தும் இன்று ...

நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கியுள்ள  தீர்ப்பில், ஆண் என்பவர் ஆண் தான். சட்டம் என்பதும் சட்டம் தான். பலாத்காரம் என்றால், அது பலாத்காரம் தான். பலாத்காரம் செய்வது கணவனாக இருந்தாலும், பலாத்காரத்திற்கு ஆளாவது மனைவியாக இருந்தாலும் பலாத்காரமே.’’ எனக் கூறியுள்ளார். ”என் மனைவி தானே. என் விருப்பத்திற்கு அவள் தட்டாமல் பணிந்து போக வேண்டும் என அதிகாரம் செய்வது மனிதாபிமானமற்றது! ஆகவே, விருப்பமில்லாத மனைவியை நிர்பந்தித்து உறவு கொள்வதோ, அதற்காக துன்புறுத்துவதோ ஏற்கதக்கதல்ல” என்கிறது தீர்ப்பு. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கிய ஒரு ...

எதிர்கால சமுதாயமான மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கங்களாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒரு சிலரின் தவறான  நடவடிக்கைகளால் ஆசிரியர் என்று மகத்தான சேவைத் தொழிலில் கறை படிய தொடங்கியுள்ளது. அனைத்து பணிகளிலும் உள்ளது போல ஆசிரியர் சமுதாயத்திலும் ஒருசில கரும்புள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்டவர்களின் செய்கைக்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறைகூறி மட்டம் தட்டி விட முடியாது. ஆசிரியர் பணியை தவம் போல் செய்கின்ற எண்ணற்ற பல ஆசிரியர்கள் இருக்கும்பொழுது இதுபோல ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றது. ...

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4 தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது. உலகம் முழுவதுமே பெண்களுக்கான  பாலியல் சீண்டல்  பிரச்சனைகள்  இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும்  பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும்  சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது! தனியார் ...

கே.டி.ராகவன் பாலியல் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைமை மிக ஜரூராக களம் இறங்கி அவரது களங்கத்தை போக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது. அகில இந்திய அளவில் அவரை காப்பாற்ற நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ், பியூஸ்கோயல் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். மதன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது..! ராகவன் விவகாரம் குறித்து போடப்பட்ட கமிட்டியின் தலைவி மலர்கொடி பேசியதில் இருந்தே இந்த விசாரணை குழுவே ராகவனை சிக்கலில் இருந்து காப்பாற்றி, புனிதப்படுத்தத்தான் என நாம் புரிந்து கொள்ளலாம்! மலர்கொடி ...

அதீத பணபலம், அதிகார பலம் தரும் தைரியத்தில் பாஜகவினர் அளப்பரிய குற்றங்களை அஞ்சாமல் செய்யும் துணிச்சல் பெற்றுவிடுகின்றனர். பாஜகவில் பாலியல் எக்ஸ்பிளாய்டேசன் அதிகமாக நடப்பது தொடர் செய்தியாக இருந்தன! பெண்கள் பாதுகாப்பாகவோ, கண்ணியமாகவோ இயங்க முடியாது என்றால் அது என்ன கட்சி? அது என்னவிதமான கலாச்சாரம்..? இது ஏதோ கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, பாஜகவில் பெண்கள் நிலை குறித்த வெளிப்படையான விசாரணை கோரும் ஒரு விவகாரமாகும்! பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியே கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்திலேயே ஒரு விசாகா ...

நாளும்,பொழுதும் பாலியல் புகார்கள் இல்லாமல் வாழ்க்கையை கடக்க முடிவதில்லை! எல்லா பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியவர்கள் ஒதுங்கி செல்வதும், குற்றமிழைப்பவர் தடையின்றி தொடர்ந்து முன்னேறுவதும், பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களுக்குள் புழுங்கி நொந்து பலியாவதும் எழுதப்படாத பொது விதியாக இருப்பதை காண முடிகிறது! குழந்தைகள் மலரைப் போன்றவர்கள், அவர்களுக்கு ஒரு பாதிப்பு எனில், அதற்கு உடனே முக்கியத்துவம் கொடுத்து, அந்த அநீதியை தடுக்க கூடிய மனமில்லை எனில், அல்லது துணிவில்லை எனில் இந்த உலகம் உயிரோடு இருப்பதைவிடவும் மண்ணுக்குள் புதைந்து அழிந்துவிடுவது எவ்வளவோ மேலானதாகும். நம் ...