இப்படியும் நடக்க முடியுமா? என வியப்பின் உச்சமாக தேசிய பங்கு சந்தை ஊழல்கள் மிரட்டுகின்றன! சில லட்சம் கோடிகளில் நடந்துள்ள இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் ஏழாண்டுகளாக மறைக்கப்பட்டதன் மர்மம் என்ன? இப்போதும் அறைகுறையான விசாரணைகளுடன் அனுசரனை காட்டப்படுவது ஏன்? தேசிய பங்கு சதையில் மிகத் தெளிவாக திட்டமிட்டு பல லட்சம் கோடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன! நூதனமாக நவீன கம்யூட்டர் வழி இணைய சர்வர் மூலம் பல புரோக்கர்கள், நிறுவனங்கள் முறைகேடாக பல்லாயிரம் கோடிகளில் பணம் ஈட்டி பலன் அடைந்துள்ளனர்! பல்லாயிரக்கணக்கானோர் பணம் கட்டி ...