தெலுங்கு படங்கள் என்றால், அதிரடி சண்டை, குத்தாட்டங்கள் கொண்ட காரசாரமான மசாலா படங்கள் தான் என்பதை தகர்த்துவிட்டது ஷ்யாம் சிங்கா ராய்! தேவதாசி முறையின் சுரண்டல், மென்மையான காதல், இடதுசாரி எழுத்தாளனின் ஆளுமை, தலித்கள் மீதான வன்கொடுமை, போன்றவற்றை கலையம்சத்துடன் சொல்கிறது! விறுவிறுப்பான ஒரு வணிக சினிமாவில் இவை காட்சிப்படுத்தப்படும் போது இப்படியும் தெலுங்கு சினிமா இருக்கிறதா..? என்று வியக்கத் தோன்றுகிறது. பொதுவாகவே, மலையாளம், தமிழ், கன்னட, வங்காள மொழிப் படங்கள் நல்ல கலையம்சத்துடனும், கதைகளுடனும் வெளிவருகின்றன. அது போல தெலுங்கு மொழி சினிமாவில், ...