மத்திய அரசுக்கு சித்தமருத்துவ ஆய்வுகள் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது! அதே சமயம் பல வருட ஆராய்ச்சியில் நடைமுறை ரீதியாக நாம் நிருபித்த சித்த மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஆயூர்வேத கண்டுபிடிப்பாக மனசாட்சியின்றி மடைமாற்றம் செய்வது இனிக்கிறதோ…? புற்றுநோய் குறித்து சித்த மருத்துவத்தில் பல குறிப்புகள், மற்றும் பெரும் மருந்துகள் உள்ளன. சென்னையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜட்ஜ் பலராமையா போன்ற புகழ் பெற்ற சித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கு வெற்றிகரமாக சிறப்பு மருந்துகளை கொடுத்து பலரை காப்பாற்றி உள்ளனர். இது குறித்து அவர் எழுதிய ...
சித்த மூலிகைகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி நிருபணம் செய்யும் ஆய்வு நோக்கத்திற்கு தொடர்ந்து தடைகள்! ஆயிரக்கணக்கான கோடிகளை ஆயுர்வேத ஆராய்ச்சிக்கு ஒதுக்குகின்ற மத்திய ஆட்சியாளர்கள் சித்த மருத்துவ ஆராய்ச்சி என்றால், நிதி ஒதுக்க மறுத்து சிடுசிடுக்கிறார்கள்! ஆயுர்வேத மருத்துவ துறை வளர்த்தெடுக்கப்பட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது ஒன்றிய அரசு! இதனுடன் முகலாய பாரம்பரியம் கொண்ட யுனானி மருத்துவம் கூட வட இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது! ஆனால், சித்த மருத்துவம் மட்டும் தொடர்ந்து நூறு சதம் புறக்கணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. மற்றவை ...
ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்கிற ரீதியில் ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம். சித்தா தேவையில்லை என்கிறது மத்திய அரசு! நீட் தடை மசோதாவை போலவே, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தையும் முடக்கி வைத்துள்ளார் கவர்னர்! சித்த மருத்துவத்தை சிதைத்து, சமஸ்கிருத ஆயூர்வேதமே சகலமும் என நிறுவ துடிக்கிறார்கள்! ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்பது என்ன? இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய அரசு இந்திய முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தை முன்மொழிகிறது. சிக்கல் இங்குதான் எழுகிறது தமிழ்நாட்டைத் ...
பாஜக அரசு புதிதாக யோகா கல்வியை உருவாக்கி, அதை பள்ளிக் கல்வி தொடங்கி மருத்துவக் கல்வி வரை கொண்டு வந்துள்ளனர்! நல்லது தான்! ஆனால், இதற்குள் இந்துத்துவ சித்தாந்ததை எப்படியெல்லாம் நுட்பமாக நுழைக்கின்றனர் என்பது தான் திகைப்பூட்டுகிறது! இந்தியா முழுமைக்கும் பள்ளிக் கல்வி முதல் உயர் மருத்துவக் கல்வி வரை தங்களது சித்தாந்தங்களை மறைமுகமாக கொண்டு செல்லும் முன்னத்தி ஏர் ஆக இந்த யோகா கல்வியை துல்லியமாக வடிவமைத்தது தான் அவர்களின் மாஸ்டர் பிளானாகும்! இதை சற்று விரிவாக பார்ப்போம்; வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ...
கற்பனைக்கு எட்டாத மிக ஆழ்ந்த ஆன்மீக, அனுபவ மற்றும் ஞானத்தால் கட்டமைக்கப்பட்டது சித்த மருத்துவ மரபு! யோக மரபின் ஆன்மீகப் பாதையில் எண்ணற்ற சித்தர்கள் மனித குலம் நோயின்றி வாழ்வதற்கு தங்கள் தூய நல்லெண்ணத்தால் உருவாக்கிய சித்த மருத்துவத்தை தகுந்த சீடர் கிடைக்காத நிலையில் அப்படியே சொல்லாமல் சென்று விட்டனர். ஆனால், தகுந்த சீடனைக் கண்டடைந்த போது அவர்கள் அதை மனதார அடுத்த தலைமுறைக்கு தந்து சென்றுள்ளனர். அப்படியான அனுபவத்தைத் தான் குப்பமுனி அனுபவ வைத்திய முறை என்ற நூலில் வியக்கதக்க வகையில் தந்துள்ளார் ...
மாபெரும் இசைக் கலைஞனான எஸ்.பி.பியின் மரணத்திற்குத் தவறான முறையில் தரப்பட்ட அலோபதி மருத்துவச் சிகிச்சையே காரணம் என்றும், அவர் மருத்துவமனை செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் பரவலான மக்கள் கருத்து உள்ளது! ஆனால், அலோபதி என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை அது பற்றித் தெரியாமல் பேசுவது முற்றிலும் தவறு, அறியாமை ….என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன! ஒரு கலைஞனின் மரணம், ஊடகங்களிலும் மக்களின் பார்வையிலும் இன்றைய விவசாய மசோதா முதற்கொண்டு பல முக்கிய சமூக பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மக்கள் மனம் கவர்ந்த கலைஞன் அல்லவா? இழப்பின் வருத்தம் ...