இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் புதிதல்ல, எத்தனையோ முறை ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால்,அர்னாப் கைதான போது தான் பத்திரிகை சுதந்திரம் குறித்த அக்கரை  உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது! அடடா என்னாமா துடிச்சு போயிட்டாங்க. அர்னாபிற்கு நீதிமன்றம்  வெறும் 14 நாட்கள் தான் சிறை என தீர்ப்பளித்தது. அதுவும் ஜாமீன் வேண்டுமென்றால், கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றது. ஆனால், அர்னாப் சாதரணமானவரா? ’’விட்டேனா பார்’’ என உச்ச நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். உச்ச ...