பெரும்பான்மையோருக்கு பிரச்சினையில்லை. ஆனால்,சிலருக்கு கொரோனா தடுப்பூசியினால் சோர்வு, முக வீக்கம், கண் சிவத்தல், தோல் அரிப்பு, நெடிய தூக்கம்,பலவீனம்.. போன்ற பல பக்க விளைவுகள்..! இத்துடன் தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்குள் கணிசமான மரணங்கள்…! இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய AEFI என்ற, தடுப்பூசி பாதகங்கள் கண்காணிப்பு கமிட்டி என்ன தான் செய்கிறது…? கொரோனா தடுப்பூசி போட்ட பின் பல்வேறு பக்கவிளைவுகளும்,மரணங்களும், ஏன் கொரோனாவும் கூட வருவதை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றையெல்லாம் முறையாக பதிவு செய்ய வேண்டிய AEFIல் அதை சரியாக ...
இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அதிசயமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும்,முக்கியஸ்தர்களிடமும் ஒரு பெரும் தயக்கம் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது! இது,”தங்களை சோதனை எலிகளாக்கிக் கொள்ள அரசியல்வாதிகளும், வி.வி.ஐபிக்களும்,மருத்துவர்களும் தயாராக இல்லை’ என்பதையே காட்டுகிறது! உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோய்க்கு எதிராக ஒரு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு,அதனால் நன்மை ஏற்படுமென்றால், அதை ஏற்பதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை! ஆனால், நூற்றுக்கணக்கான நாடுகளும், தனியார் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிலையில் – மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு போவதற்கு முன்பாகவே – அவசர அவசரமாக ...