சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆஜரான அசிஷ் மிஷ்ரா, ஆஜர் செய்யப்பட்ட விதம் இந்த வழக்கில் இனியும் நியாயம் எதிர்பார்க்க முடியுமா..? என வலுவான சந்தேகத்தை நாட்டு மக்களிடம் எழுப்பி உள்ளது. குற்றவாளியை காப்பாற்ற உ.பி அரசும், ஒன்றிய அரசும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடும் என்று தெரிய வருகிறது! விவசாயிகள் மீதான தாக்குதலில் கொலை குற்றவாளிகள் பட்டியலில் ஆசிஷ் மிஷ்ரா பெயர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது அவர் மீது முதல் குற்றப் பத்திரிகை பதிவாகி உள்ளது. ஆனால் காவல்துறையினர் சாட்சி என்ற வகையில் ...