சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் ஆன்மீக வேஷம் போட்டு சின்னஞ் சிறுமிகளிடம் பாலியல் வன்மத்தில் ஈடுபட முடிகிறதென்றால், அது அந்த தனிமனிதனிடம் இருக்கும் குறைபாடு மட்டுமல்ல. இந்த சமூகமும் ஒரு குற்றவாளிதான்! கண்மூடித்தனமான பக்தியால் ஒருவரை கடவுளுக்கு நிகராக நம்புவது என்பது நமது கலாச்சாரத்திலேயே தொன்றுதொட்டு திட்டமிட்டு மக்களுக்கு காலாகாலமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது! அறுபத்திமூன்று நாயன்மார்களில் சிறுத் தொண்டர் நாயனார் என்பவரின் கதை என்பது என்ன..? பிள்ளைக்கறி வேண்டிய ஒரு நரசாமியாருக்கு அதாவது சிவனடியாருக்கு சிவபக்தர்களான கணவனும், மனைவியும் தங்கள் ஐந்து வயது ...