வீரப்பனை பற்றி அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்துள்ள பத்திரிகையாளர்களில் சிவசுப்பிரமணியன் முதலாமவர். வீரப்பன் என்பவனை தனி மனிதனாக பார்த்து எழுதிவிட முடியாது! காடு அதில் வாழும் உயிரினங்கள்,அங்குள்ள மரங்கள் மற்றும் இயற்கைச் சூழல்,பழங்குடிகள், காவல்துறை, இரு மாநில அரசுகள், வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள்..என அனைத்தையும் சரியாக உள்ளது உள்ளபடி உள்வாங்கி எழுத வேண்டும். இது போன்ற நூல்களை  கதை புத்தகம் போல்  எழுதிவிட முடியாது. நாட்டிற்கே தெரிந்த ஒரு நபரை பற்றி எழுதும்பொழுது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் பல எதிர்ப்புகளை சந்திக்க ...