‘பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் என்னவாகும்’ என்பதற்கு கர்நாடகமே கண்கண்ட சாட்சியாகிறது! அமைதியான கல்வி நிலையங்கள் அல்லோலகலப் படுகின்றன! ‘ஹிஜாப்’ என்பது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையா? அல்லது அடிமைப்படுத்தும் உடையா? என்ற வாதங்களும் வலுப்பெற்றுள்ளன! இது நாள் வரை இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்து வருவது சாதாரண நிகழ்வாக இருந்த கல்லூரி, பள்ளிகளில் எல்லாம் இன்றைக்கு அப்படி அணிந்து வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்! இதனால்,சில மாணவிகள் இன்று தேர்வு எழுத அனுமதி இல்லாமல் திருப்பி அனுப்பபட்டு உள்ளனர். இந்த ...