இது வரையிலான தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களாவது இருந்தன. ஆனால், தற்போதைய பாஜக அரசோ, புதிய பணிச்சூழல் சட்டத் தொகுப்பின் வழியாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி கொள்ளலாம் என சூசகமாகச் சொல்கிறது! எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்…இப்படியாக எண்ணற்ற சுதந்திரங்களை முதலாளிகளுக்கு அள்ளி வழங்குகிறது மோடி அரசு! இது வரை தொழிலாளர்களுக்கு ஒரளவேனும் பாதுகாப்பளித்த 44 சட்டங்களைச் சுருக்கி, 4 தொழிலாளர் சட்டத் ...
மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில் இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற சில பிரிவினர் மற்றவர்கள் பார்வையிலேயே படக்கூடாது. ...
வாகனம் எங்களுடையது. அதன் மெயிண்டன்ஸும் எங்களுடையது, உழைப்பும் எங்களுடையது. ஆனால், பலன்களோ ( ஓலா, உபர்) அவர்களுடையது! பாதிப்போ எங்களுடையது. இதை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க போகின்றன மத்திய மாநில அரசுகள்? என்று கேட்கும் – விரக்தியின் விளிம்பில் இருக்கும் – வாகன ஓட்டிகள் பக்கம் அரசின் கவனம் திரும்புமா…? ஓலா உபர் நிறுவனங்களின் பகாசூரக் கொள்ளையை தெரிந்தும் தெரியாதது மாதிரி வேடிக்கை பார்க்கும் அரசின் அலட்சியத்தால் ஆயிரக்கணக்காக வாகன ஓட்டிகள் வீதி இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் அண்ணா ...