இன்றைக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல், குடு குடு கிழவன் வரை, செல்போன் பயன்படுத்தாத நபரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை  இருக்கிறது. இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்தாலும்,செல்போன் கடைகள் வியாபாரமின்றி விரக்தியில் மூடப்பட்டு வருகின்றன என்பதே உண்மை! ’’ ஆன்ராய்டு செல்போனா, அதுல கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் வருதுப்பா. அதையெல்லாம் என் பிள்ளைங்களுக்கு ஒரு நாளும் கொடுக்க மாட்டேன்…’’ என்று சொன்ன பெற்றோர்களெல்லாம், பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ஆன்ராய்டு போனுலயே எதுப்பா நல்ல போனு… ஜூம் மீட்டிங்குல ...