கடவுளை அரசியல் பிழைப்புக்கு பயன்படுத்துவதை கடைசி வரை எதிர்த்த ஒப்பற்ற துறவி சுவாமி அக்னிவேஷ்! ஒரு உண்மையான ஆன்மீகவாதிக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் சுவாமி அக்னிவேஷ்! ’’கடவுளை கோயிலில் தேடாதீர்கள்…,அன்பு,கருணை, நீதி,கருணை ஆகிய வடிவங்களில் வெளிப்படுவதே கடவுள்…’’என்றவர் கடைசி வரை விளிம்பு நிலை மனிதர்களில் ஒருவனாகவே வாழ்ந்து மறைந்தார். ’’அர்ச்சகர்களையெல்லாம் சாமியாக்கிவிடாதீர்கள்! அதுவும் பிழைப்புக்கான ஒரு தொழில்! அர்சகர்கள் என்பது வேறு,அருளாளர்கள் என்பது வேறு’’ ’’இன்னினாரெல்லாம் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றால்,அங்கே ஆண்டவன் மட்டும் எப்படி நுழைந்து குடியிருக்க முடியும்…’’ இறைவனை வழிபட வேண்டும் என்று ...