‘மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கு’  என்று சுவரில் எழுதி வைத்து இருப்பதை   சிறுவயதில்  பள்ளிக்கு நடந்து போகும்போது பார்த்து இருக்கிறேன். அதன் அருகில் பெரியார் படத்தை வரைந்திருப்பார்கள்.  ‘மண்டல்’ என்பது ஒரு  பெயர் என்பது உயர்நிலைப்பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு அப்போது தெரியாது. வி்.பி. சிங் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் மண்டல் என்ற பெயர் இல்லாத செய்திப் பத்திரிகைகளைக்  காண முடியாது. 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ...

கிளப்ஹவுஸ் செயலி வெளிநாடுகளில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் முதலாக இந்தியாவிலும் பயன்பாட்டில் உள்ளது. கிளப்ஹவுஸ் செயலி, குரல்கள் மூலமாக கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் சமூக ஊடகப் பயன்பாடு ஆகும். இந்தச் செயலியில், தட்டச்சு செய்திகள், எமோஜிகள், வீடியோக்கள், வெளிவட்ட இணைப்புகள் போன்றவற்றை பரிமாற்றம் செய்ய இயலாது. யாஹு மெசஞ்சரில் ஆரம்பித்து, பிளாக்கர், ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்களின் பரிணாம வளர்ச்சி மிக நெடிய வரலாறு கொண்டது. ஒவ்வொரு சமூக வலைத்தளத்துக்கென்றும் தனிப்பட்ட ...