“யார் தான் இதைத் தட்டிக் கேட்பது?” என்று மக்கள் ஆதங்கப்படும் பல்வேறு பிரச்சினைகளையும், “இதெல்லாம் அப்படித்தான்… யாரும் எதுவும் செய்யமுடியாது” என மக்கள் நம்பிக்கையிழந்த பல விசயங்களையும் நீதிமன்றங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று போராடி வென்றதில், டிராபிக் ராமசாமி தற்கால தமிழ் சமூகத்தின் மனசாட்சியின் குரலாக வெளிப்பட்டார்! எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள் – இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள்! சுறுசுறுப்பான நடை, வெட்டு ஒன்று, துண்டு இரண்டு எனப் ...