தமிழும், தமிழரும் ஏற்றம் பெறவே தன் வாழ்வை முற்றமுழுக்க அர்ப்பணித்து வாழ்ந்தவர் பெருந்தமிழ் போராளி, ’தமிழ் தாத்தா’ என்றழைக்கப்பட்ட கி.ஆ.பெ விசுவநாதம்! “நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதைகுழியே அதிகமாக தமிழை வளர்க்கும்.” என்றதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்கே தன்னை விதையாக்கியவர் கி.ஆ.பெ.விசுவநாதம்! தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்குச் சிந்தனையாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர்,தமிழ்ப் போராளி, ஏற்றுமதி வணிகர் எனப் பன்முகம் கொண்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம்! சித்த மருத்துவத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பால் – சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த வகையில் ...