காமராஜர் காலத்து மாணவரணித் தளபதிகளுக்கு தலைமை தாங்கியவர், கம்பீரமான பேச்சாளர், தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால் புலமை கொண்டவர், தீவிர புத்தக வாசிப்பாளர், சிறந்த  சோசலிஸ்ட், திராவிட இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் நெருக்கமான நண்பர்களைக் கொண்டவர், நேர்மையான வழக்கறிஞர், எளியோருக்காக பணம் வாங்காமல் ஆஜரானவர்.., பெரும் ஆளுமையாக இருந்தும் உரிய அங்கீகாரம் பெறாதவர்…என பலவாறாக சொல்லிக் கொண்டே போகலாம் நண்பர் தஞ்சை ராமமூர்த்தியைக் குறித்து! தஞ்சை இராமமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி இடியாய் இறங்கி என்னை வந்து தாக்கியது ! தஞ்சை இராமமூர்த்தி  மறைந்தார் ! ...

காந்திக்கு நிகரான மாபெரும் இந்தியத் தலைவராக – அதிகார அரசியலில் இருந்து விலகி, மிகத் துணிச்சலுடன் மக்கள் நலன் சார்ந்த தொலை நோக்கு சித்தாந்தத்துடன் இயங்கிய – ஒருவர் உண்டென்றால், அது ராம் மனோகர் லோகியா தான்! காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கி, மண்ணுக்கேற்ற சோசலிச பார்வையோடு திகழந்தவர் சமரசமற்ற மாபெரும் தலைவர் ராம் மனோகர் லோகியா! பாசாங்குத்தனத்தையே பண்பாடாகக் கொண்ட இந்திய சமூகத்தில் தன்னை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி உண்மையின் ஒளியாய் ஜொலித்தவர் லோகியா! தனது பத்தாம் வயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்த தலைவர் அவர்! ...

கம்யூனிஸத்தை பேசவும், எழுதவும் பலர் உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டாக வாழ்வது மிகக் கஷ்டமாகும்! ஆனால், காந்தி இயல்பிலேயே கம்யூனிஸ குணாம்சங்களோடு இருந்தார்! அந்தப்படியே தான் அவரது போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் ஆகிய ஆஸ்ரம வாழ்க்கையை ஒரு கம்யூனாக கட்டமைத்து, யாவருக்கும் சமமான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தார்! இன்னும் எத்தனையெத்தனை விவகாரங்களில் அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாக வெளிப்பட்டார் எனப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வந்துள்ளன. அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம்  என பலவற்றை  தொடர்ந்து ...