அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கட்சியில் ஒருவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் அல்லது தொடர்ந்து இருக்க வேண்டும் என்றாலும் அவர் தயவு தேவை என்கிறார்கள்! அவர் ஆட்சியில் எம்.எல்.ஏவும் இல்லை, அமைச்சரும் இல்லை, ஆனால், யாரும் எம்.எல்.ஏவோ அமைச்சரோ ஆக வேண்டும் என்றால், அவர் கடைக் கண் பார்வை தேவை என்கிறார்கள். அதிகாரிகள் முக்கிய பதவிகளை அடைவதற்கும் அவரையே நாடுவதாகத் தெரிகிறது. பெரும் தொழில் அதிபர்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் அவர் வழியே அணுகுவதாக சொல்லப்படுகிறது. அதாவது அதிகாரம் ...