உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்! இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள்,விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம். மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால்,அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய,பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்! அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்! சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து ...