மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கபிள்சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அதன் 52 செயற்குழு உறுப்பினர்களுடன் கூடி அனைத்து பிரச்சினைகளையும் மனம் திறந்து விவாதித்துள்ளது! கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கபட்டதோடு, காங்கிரசுக்கு சித்தாந்த பிடிப்புள்ள – போராட குணம் வாய்ந்த – களத்தில் நின்று போராடக் கூடியவர்களே இன்றைய தேவை என்பதை சோனியாவும், ராகுலும் சூசகமாக தெளிவுபடுத்தினர்! காங்கிரஸ் தலைமையை விமர்சித்து  பகிரங்கமாக பொதுவெளியில் பேசிய கபிள்சிபிள், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைவரும் கூடி விவாதித்தனர்! மன்மோகன்சிங் மருத்துவமனையில் ...

இன்று அதிகாலை கொரானாவின் பின் விளைவுகளால் வீழ்த்தப்பட்டு அகமது பட்டேல் மறைந்த செய்தி வேறு எவரையும் விட சோனியா, ராகுல்,பிரியங்கா முவரையும் மிக அதிகமாகவே பாதித்துவிட்டது. அந்த அளவுக்கு அந்த குடும்பத்தில் ஒருவராக தன்னை சுமார் 35 ஆண்டு காலம் பிணைத்துக் கொண்டு வளைய வந்தவர் அகமது பட்டேல்! ராஜீவ்காந்தி எதிர்பராவிதமாக அரசியலுக்குள் நுழைந்த போது அவர் தனக்கு ஆப்த நண்பனாக அடையாளம் கண்டது அகமது பட்டேலைத் தான்! அகமது பட்டேலைத் தான் ராஜீவ் காந்தி தனது ஆட்சியில் பாராளுமன்ற செயலாளராக வைத்துக் கொண்டார். ...